சி.எஸ்.கே. ஓப்பனிங் வீரருக்கு காயம்!

 
csk


ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் மீண்டும் வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகள் இடையே நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் டுப்லஸ்ஸிஸ் திடீரென காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அதனால் அவர் ஒரு சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

மேலும் டூப்லஸ்ஸிஸ் இந்த தொடரில் கலந்து கொள்ள முடியுமா என்ற சந்தேகத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எழுப்பி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் வாட்சன் ஓய்வு பெற்று விட்டதை அடுத்து டூப்லஸ்ஸிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெஸ்ட் ஓப்பனராக இருந்த நிலையில் திடீரென அவர் காயம் அடைந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

டூப்லஸ்ஸிஸ் அவர்களுக்கு இடுப்பு எலும்பில் காயம் ஏற்பட்டு விட்டதாகவும் அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

From around the web