கேதார் ஜாதவ் இல்லாமலும் தோல்வி அடைந்த சிஎஸ்கே

 

இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடிய சென்னை அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடந்த போட்டியில் கேதார் ஜாதவ்வினால் தான் தோல்வி என்ற நிலையில் இன்றைய போட்டியில் கேதார் ஜாதவ் இல்லாமலேயே தோல்வி அடைந்ததால் ஒட்டுமொத்த அணியும் சொதப்பலாக இருப்பதை உணர முடிகிறது

இன்றைய போட்டியில் விராத் கோஹ்லியின் ஆவேசமாக அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி, ஆரம்பத்திலேயே டீபிளஸ்சிஸ் மற்றும் வாட்சன் விக்கெட்டை இழந்தது. அதன்பின்னர் ஜகதீசன் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினாலும், அவர் 33 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். ராயுடு 42 ரன்களும், தோனி 10 ரன்களும் எடுத்து அவுட் ஆனதால் சாம் கர்ரன் ஒருவர் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் பேட்ஸ்மேனாக இருந்தார். ஆனால் அவரும் முதல் பந்திலேயே அவுட் ஆனதால் சிஎஸ்கே தோல்வி உறுதியானது

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இன்றைய தோல்வியால் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

From around the web