தல தோனியின் கொரோனா பரிசோதனை முடிவு: பரபரப்பு தகவல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் வரும் செப்டம்பர் 19 முதல் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு முன் நான்கு முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இன்று முதல் பரிசோதனையை செய்து கொண்டார். ராஞ்சியில் உள்ள அவரது வீட்டிற்கு
 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் வரும் செப்டம்பர் 19 முதல் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு முன் நான்கு முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது

இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இன்று முதல் பரிசோதனையை செய்து கொண்டார். ராஞ்சியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மாதிரியை எடுத்து சென்றனர்

இந்த நிலையில் சற்று முன் தோனியின் பரிசோதனை முடிவு வெளிவந்துள்ளது. பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பயிற்சிக்காக தல தோனி சென்னைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது

From around the web