ரிஹானா டுவிட்டிற்கு பொங்கி எழுந்த கிரிக்கெட் வீரர்கள்: அமைதி காக்கும் தல தோனி!

 

விவசாயிகள் போராட்டம் குறித்து ரிஹானா பதிவு செய்த ஒரே ஒரு டுவிட் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த டுவிட்டிற்கு திடீரென பிரபலங்கள் பொங்கி எழுந்தனர்.

சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, விராத் கோலி உள்பட பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கங்கனா ரனாவத் லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் ரிஸானாவின் கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்

dhoni

இந்த நிலையில் ரிஹானாவிற்கு எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் தல தோனி அமைதியாக உள்ளார். அதே நேரத்தில் அரசுக்கு எதிராகவும் அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிடத்தக்கது. தோனிக்கு இருக்கும் தேசியப் பற்று என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் ஒருவித நிர்ப்பந்தம் காரணமாக கருத்து தெரிவிக்க அவசியம் இல்லை என்பதுதான் அவரது கருத்தாக இருக்கிறது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர் 

பிசிசிஐ நிர்ப்பந்தம் காரணமாக சச்சின் உள்பட ஒரு சில வீரர்கள் டுவிட்டுகளை பதிவு செய்திருக்கலாம் என்றும் ஆனால் அந்த நிர்ப்பந்தம் தல தோனியிடம் செல்லாது என்றும் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web