வான்கடே ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா: ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?

 

ஐபிஎல் போட்டிகள் வரும் 9-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் மும்பையில் மட்டும் 10 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சேர்ந்த ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அந்த மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது

ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு சென்னை, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி, பெங்களூர் ஆகிய 6 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்பது தெரிந்ததே. ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு மோதுகின்றன

wankhade

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் மிக அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 8,000க்கும் அதிகமானோர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 

இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஐபிஎல் போட்டிகளை பாதுகாப்பாக மும்பையில் நடத்த முடியும் என பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஒருவேளை மும்பையில் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் ஹைதராபாத்., இந்தூர் ஆகிய நகரங்களில் போட்டிகளை மாற்றவும் ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன

From around the web