சிட்னி டெஸ்ட்: இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைக்குமா?

இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் சிட்னியில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 622 ரன்கள் குவித்த நிலையில் ஆஸ்திரேலியா அணி சற்றுமுன் வரை 6 விக்கெட்டுக்களை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், ஜடேஜா 2 விக்கெட்டுக்களையும் ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இன்னும் 424 ரன்கள் பின்
 


சிட்னி டெஸ்ட்: இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைக்குமா?

இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் சிட்னியில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 622 ரன்கள் குவித்த நிலையில் ஆஸ்திரேலியா அணி சற்றுமுன் வரை 6 விக்கெட்டுக்களை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், ஜடேஜா 2 விக்கெட்டுக்களையும் ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இன்னும் 424 ரன்கள் பின் தங்கியுள்ள உள்ள நிலையில் இந்திய பந்துவீச்சாளர்கள் சுதாரிப்பாக பந்துவீசினால் இன்னிங்ஸ் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web