ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ்: செரினாவை வீழ்த்திய வீராங்கனை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் செரினா இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை செக்குடியரசு வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா 4-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக கரோலினா பிளிஸ்கோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த தொடரில் செரீனா சாம்பியன் பட்டம் பெற்றால் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்டின் சாதனையை
 

ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ்: செரினாவை வீழ்த்திய வீராங்கனை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் செரினா இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

அவரை செக்குடியரசு வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா 4-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக கரோலினா பிளிஸ்கோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இந்த தொடரில் செரீனா சாம்பியன் பட்டம் பெற்றால் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்டின் சாதனையை சமன் செய்திருப்பார். ஆனால் செரினாவின் இந்த கனவு இன்றைய தோல்வியால் தகர்ந்தது.

From around the web