தொடர் தோல்வி எதிரொலி: நியூசிலாந்து அணியில் மாற்றம்

ஆஸ்திரேலியா தொடரில் பெற்ற வெற்றியை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து நாட்டிலும் தொடர் வெற்றியை பெற்று வருகிறது. இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடரில் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில் சொந்த மண்ணில் மூன்று தொடர் தோல்வியால் நியூசிலாந்து அணியில் தற்போது ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம், சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்ட்லே ஆகியோர்
 

தொடர் தோல்வி எதிரொலி: நியூசிலாந்து அணியில் மாற்றம்

ஆஸ்திரேலியா தொடரில் பெற்ற வெற்றியை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து நாட்டிலும் தொடர் வெற்றியை பெற்று வருகிறது. இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடரில் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.

இந்த நிலையில் சொந்த மண்ணில் மூன்று தொடர் தோல்வியால் நியூசிலாந்து அணியில் தற்போது ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம், சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்ட்லே ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு பதிலாக டக் பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் இனிவரும் இரு போட்டிகளிலும் பந்துவீச்சு இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

நியூசிலாந்து அணியின் வீரர்கள் பின்வருமாறு: 1. கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2. டாட் ஆஸ்ட்லே, 3. டிரென்ட் போல்ட், 4. கொலின் டி கிராண்ட்ஹோம், 5. பெர்குசன், 6. மார்ட்டின் கப்தில், 7. மேத் ஹென்ரி, 8. டாம் லாதம், 9. கொலின் முன்ரோ, 10. ஜிம்மி நீஷம், 11. ஹென்ரி நிக்கோல்ஸ், 12. மிட்செல் சான்ட்னெர், 13. ராஸ் டெய்லர், 14. டிம் சவுத்தி

From around the web