ஸ்பெயின் அணியை வீழ்த்திய இந்திய மகளிர் ஹாக்கி அணி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்பெயின் மகளிர் ஹாக்கி அணியை இந்திய மகளிர் அணி நேற்று நடந்த போட்டி ஒன்றில் வீழ்த்தியுள்ளது. நேற்று ஸ்பெயின் நாட்டில் உள்ள முர்சியா நகரில் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கும் ஸ்பெயின் நாட்டின் மகளிர் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இந்த ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. இந்த அணியின் நட்சத்திர வீராங்கனை லாம்ரெம்சியாமி இரண்டு கோல்களையும், நேஹா
 

ஸ்பெயின் அணியை வீழ்த்திய இந்திய மகளிர் ஹாக்கி அணி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்பெயின் மகளிர் ஹாக்கி அணியை இந்திய மகளிர் அணி நேற்று நடந்த போட்டி ஒன்றில் வீழ்த்தியுள்ளது.

நேற்று ஸ்பெயின் நாட்டில் உள்ள முர்சியா நகரில் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கும் ஸ்பெயின் நாட்டின் மகளிர் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது.

இந்த ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. இந்த அணியின் நட்சத்திர வீராங்கனை லாம்ரெம்சியாமி இரண்டு கோல்களையும், நேஹா கோயல், நவ்நீத் கவுர் மற்றும் ராணி ஆகியோர் தலா ஒரு கோலையும் போட்டனர்.

நேற்று இந்திய அணி வீராங்கனைகள் ஒற்றுமையாகவும் அர்ப்பணிப்பு உணர்வோடும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு விளையாடியதாலும் வெற்றி பெற்றதாக இந்திய ஹாக்கி மகளிர் அணியின் பயிற்சியாளர் தெரிவித்தார்.

From around the web