நோ பால் குழப்பத்தால் அம்பயர்களிடம் டென்சனான “கேப்டன் கூல்” தோனி!

சென்னை அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையேயான ஐபில் 2019 தொடரின் 25வது போட்டி ஜெய்ப்பூரில் நடைப்பெற்றது. இப்போட்டியில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் தோனி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டியில் தோனி அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்த சம்பவம்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அணியின் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் கடைசி ஓவரின் 3வது பந்தில் தோனி அவுட்டாகி வெளியேறினார். கடைசி ஓவரின் 4வது பந்து, பேட்டிங் செய்துக் கொண்டிருந்த மிட்செல்
 
Dhoni

சென்னை அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையேயான ஐபில் 2019 தொடரின் 25வது போட்டி ஜெய்ப்பூரில் நடைப்பெற்றது. இப்போட்டியில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் தோனி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நோ பால் குழப்பத்தால் அம்பயர்களிடம் டென்சனான “கேப்டன் கூல்” தோனி!

இப்போட்டியில் தோனி அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்த சம்பவம்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் அணியின் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் கடைசி ஓவரின் 3வது பந்தில் தோனி அவுட்டாகி வெளியேறினார். கடைசி ஓவரின் 4வது பந்து, பேட்டிங் செய்துக் கொண்டிருந்த மிட்செல் சான்டரின் மார்பு உயரத்துக்கும் மேல் சென்றது. இதனால் அம்பயர் நோ பால் கொடுத்தார். ஆனால் ஸ்குவையர் லெக் அம்பயர், இது நோ பால் இல்லை என்று கூறினார். இதனால் நோ பால் திரும்பப் பெறப்பட்டது.

இதனைக் கண்ட ஜடேஜா அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவுட்டாகி வெளியே சென்ற தோனி பவுண்டரி அருகே இருந்து மீண்டும் களத்துக்குள் வந்தார்.

முதலில் நோ பால் எனக் கூறியதை சுட்டிக் காட்டி, இது நோ பால் தான் என வாக்குவாதம் செய்தார். அதுவும் கையை காட்டி குறிப்பிட்டு பேசியதைக் கண்டு “கேப்டன் கூல் தோனியா இது?” என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

தற்போது இந்த செயலுக்காக தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது ஐபில் விதிகளின்படி லெவல் 2 குற்றம் என்பதால் போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிப்பட்டுள்ளாத தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web