இந்தியா- பாகிஸ்தான் போட்டியும் நடைபெற வாய்ப்பில்லை

லண்டன்: இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஜூன் 16 ஆம் தேதி மோதும் போட்டி நடக்காது என்று தகவல்கள் வருகிறது. இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பல திருப்பங்களைக் கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டம் தொடங்கும் முன்பும் இன்றைய ஆட்டத்தில் யார் ஜெயிப்பார் என்ற கேள்வியை விட இன்றைய ஆட்டம் நடைபெறுமா? என்ற கேள்வியே நிலவி வருகிறது. சதி செய்யும் வானிலை: எப்போது எந்த மைதானத்தில் மழை பெய்யும், எப்போது எந்த போட்டி ரத்தாகும் என்று
 
இந்தியா- பாகிஸ்தான் போட்டியும் நடைபெற வாய்ப்பில்லை


லண்டன்:

இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஜூன் 16 ஆம் தேதி மோதும் போட்டி நடக்காது என்று தகவல்கள் வருகிறது. இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்  தொடர் பல திருப்பங்களைக் கொண்டதாக இருக்கிறது.

ஒவ்வொரு ஆட்டம் தொடங்கும் முன்பும் இன்றைய ஆட்டத்தில் யார் ஜெயிப்பார் என்ற கேள்வியை விட இன்றைய ஆட்டம் நடைபெறுமா? என்ற கேள்வியே நிலவி வருகிறது.

சதி செய்யும் வானிலை:

எப்போது எந்த மைதானத்தில் மழை பெய்யும், எப்போது  எந்த போட்டி ரத்தாகும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. இதுகுறித்து வானிலை மையம் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

உலகக்கோப்பையில் நடந்த திருப்பங்கள்:

இதுவரை மழையின் காரணமாக இலங்கை- வங்கதேசம், இலங்கை -பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள்- தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து – இந்தியா அணிகள் எதிர்கொண்ட போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் மொத்தம் 4 போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் போட்டியும் நடைபெற வாய்ப்பில்லை

இதுவரை நடந்ததில்லை:

எந்த உலகக் கோப்பை தொடரிலும் இந்த முறை நடந்ததுபோல் நடக்கவில்லை. இதுவரை அதிகபட்சமாக 2 போட்டிகள் வரை மழையால் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இதுவரை 3 அல்லது 4 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது கிடையாது.

விடவே விடாது இந்த மழை:

இனி வரும் போட்டிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவலை வெளிப்படுத்தியுள்ள்து. இன்று இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் போட்டியில் மழை பெய்யாது என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாளை ஆஸ்திரேலியா இலங்கை அணிகள் மோதும் போட்டியில் மழையால் பாதிப்பில்லை எனவும், ஆனால் ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி மழையால் தடைபடும் என்றும் வானிலை அறிக்கை கூறியுள்ளது.

கொந்தளிக்கும் ரசிகர்கள்:

இந்திய பாகிஸ்தான் போட்டியும் மழையால் பாதிக்கப்படும், இல்லையென்றாலும், மைதானம் விளையாடும் நிலையிலேயே இருக்காது என்று ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.

From around the web