தோனிக்கு கட்டாயம் ஓய்வு அளிக்க வேண்டும்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..

லண்டன்: இந்தியாவிற்கு எதிராக 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை பெற்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது, 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கை இந்திய அணி சீரான வேகத்தில் ஆடியது. ஆனால் இந்திய அணி எவ்வளவு போராடியும் வெற்றி வாய்ப்பு கை நழுவிப்போனது. இறுதியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரெக்கார்ட் பிரேக்: 40 ஆண்டு கால உலகக்கோப்பை சாதனையை இங்கிலாந்து இந்த ஆட்ட த்தில் முறியடித்துள்ளது. அது இந்திய
 


லண்டன்:

இந்தியாவிற்கு எதிராக 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை பெற்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது, 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கை இந்திய அணி சீரான வேகத்தில் ஆடியது. ஆனால் இந்திய அணி எவ்வளவு போராடியும் வெற்றி வாய்ப்பு கை நழுவிப்போனது. இறுதியில் இந்திய அணி  31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

ரெக்கார்ட் பிரேக்:

40 ஆண்டு கால உலகக்கோப்பை சாதனையை இங்கிலாந்து இந்த ஆட்ட த்தில் முறியடித்துள்ளது. அது இந்திய அணிக்கு எதிரான சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாகவே உள்ளது. 

இப்படி ஆகிவிட்டதே:

தோனிக்கு கட்டாயம் ஓய்வு அளிக்க வேண்டும்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் ரன்கள் சீரான வேகத்தில் உயர்ந்தது.  பெரிய இலக்கை நோக்கி வெறியோடு ஆடினார்கள் இந்திய அணி வீர்ர்கள். அதிலும் குறிப்பாக கோலி, ரோஹித், பாண்டியா இவர்கள் மூவருடைய ஆட்டத்தின் போக்கு இந்தியா எப்படியாவது வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வரவழைக்கும்படி இருந்தது. தோல்விக்கு சாத்தியமில்லை என்று எண்ணும்படி இருந்த அந்த ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்தியாவின் மோசமான நிலை:

பாண்டியா மற்றும் பண்ட் ஆடும் போது இந்திய அணியின் ரன் இங்கிலாந்து அணியை வீழ்த்த வாய்ப்புள்ளதாக உணர்த்தியது. ஒரு ஓவருக்கு 8 ரன்கள் அடித்தால் போதும் என்ற வாய்ப்பிலிருந்து சரிய தொடங்கியது இந்திய அணி. அணியை மீண்டும் தூக்கி நிறுத்த ஆள் இல்லாததால் வெற்றிப் பயணத்தில் பேரிடி விழுந்தது.

தோனிக்கு ஓய்வு:

தோனி ஆடத்துவங்கிய பின் இந்திய அணியின் ஆட்டம் மோசமானது. நிறைய ரன்கள் இலக்கு இருந்த போதும் தோனி அவருக்கே உண்டான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தோனியின் ஆட்டம் குறித்து கடந்த மூன்று ஆட்டங்களிலும் சர்ச்சைகள் கிளம்பிய வண்ணமே உள்ளது.

கடுப்பான ரசிகர்கள்:

 தோனியின் ஆட்டத்தால் இந்திய ரசிகர்கள் பொறுமையிழந்தனர். தோனி ஏன் இப்போதும் கூட பொறுமையாக ஆடுகிறார் என்று ரசிகர்கள் கடுப்பாகி அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். தற்போது தோனிக்கு எதிராக ரசிகர்கள், விமர்சகர்கள் வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

From around the web