இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்துமா இந்திய அணி?

பர்மிங்காம்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் இன்று ஜூன் 30 ஆம் தேதி 38-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதுவரை தோல்வியே அடையாத இந்திய அணி 5 வெற்றி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகளுடன் அரைஇறுதிக்குள் நுழையவுள்ளது. முந்தைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 143 ரன்னில் வீழ்த்தியது, இந்திய அணி அதே சிறப்பான ஆட்டத்துடன் இங்கிலாந்தையும் வீழ்த்தும். இந்திய அணியில் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல்
 

பர்மிங்காம்:

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் இன்று ஜூன் 30 ஆம் தேதி 38-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.  இதுவரை தோல்வியே அடையாத இந்திய அணி 5 வெற்றி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகளுடன் அரைஇறுதிக்குள் நுழையவுள்ளது.

முந்தைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 143 ரன்னில் வீழ்த்தியது, இந்திய அணி அதே சிறப்பான ஆட்டத்துடன் இங்கிலாந்தையும் வீழ்த்தும். இந்திய அணியில் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல்  உள்ளிட்டோர்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்துமா இந்திய அணி?

பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ராவும், முகமது ஷமியும் சிறப்பாக விளையாடுகிறார்கள்.

அணியைப் பொறுத்தவரை முதல் 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றுள்ளார்கள். இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்து இங்கிலாந்தின் அரைஇறுதி வாய்ப்பு நெருக்கடியில் உள்ளது. வரவிருக்கும் ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும்.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கேப்டன் மோர்கன், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ போன்ற சிறப்பான ஆட்டக்காரர்கள் மீதி பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இரு அணிகளின் உத்தேசப் பட்டியல்:

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோ, ஜாசன் ராய் அல்லது ஜேம்ஸ் வின்ஸ், ஜோ ரூட், இயான் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், ஜோப்ராஆர்ச்சர் அல்லதுபிளங்கெட்,மார்க் வுட்.

பலம் பொருந்திய இரு அணிகள் விளையாடுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. இந்திய வீரர்கள் ஆரஞ்சு, நீலம் நிறம் கலந்த புதுமையான சீருடையில் இன்றைய போட்டியில் ஆடவுள்ளனர். 55 சதவீதத்திற்கும் மேலான டிக்கெட்டுகளை இந்திய ஆதரவாளர்களே வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web