தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இதுதான் காரணமா?

மும்பை : தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இது தோனி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் என்பதால் அவர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஓய்வு பெறும் தோனி: தோனி உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி ஒரு வருட காலமாக வலம் வந்தது. ஆனால் இந்த நிலையில், இந்த ஓய்வுச் செய்தி உலகக்கோப்பை தொடரின் மோசமான ஆட்டத்திற்கு இடையே உறுதியாகியுள்ளது. என்னதான் காரணம்?
 

மும்பை :

தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இது தோனி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் என்பதால் அவர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

ஓய்வு பெறும் தோனி:

தோனி உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி ஒரு  வருட காலமாக வலம் வந்தது. ஆனால் இந்த நிலையில், இந்த ஓய்வுச் செய்தி உலகக்கோப்பை தொடரின் மோசமான ஆட்டத்திற்கு இடையே உறுதியாகியுள்ளது.

என்னதான் காரணம்?

தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இதுதான் காரணமா?

தோனி நடப்பு உலகக்கோப்பை தொடரில் ரன்கள் எடுத்தாலும், அவரால் சுழற் பந்துவீச்சிலும், மத்திய ஓவர்களிலும் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதைக் காரணமாக கருதியே தோனியின் ஓய்வு குறித்த செய்திகள் வெளியாகி இருக்கிறது. 

விமர்சனத்தால் பாதிக்கப்பட்ட தோனி :

இந்த மோசமான ஆட்டத்தில் தோனிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் பல தரப்புகளில் கூறப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், சேவாக் உட்பட அனைவரும் தோனிக்கு எதிராக கடும் விமர்சனங்களைக் கூறினர். தோனியின் ரசிகர்களும் இதனால் பொறுமையிழந்து கடுப்பாகி விட்டனர்.

தொடர் ஓய்வு அறிவிப்புகள்:

 இன்று அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தன் ஓய்வை அறிவித்துள்ளார். உலகக்கோப்பை அணிக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கும் அவர், இரண்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட போதும், விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

ஓய்வு நிச்சயம்தான்:

தோனி டெஸ்ட் போட்டி ஓய்வு முடிவை திடீரெனதான் அறிவித்தார். அதே போல, ஒருநாள் போட்டிகள் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியதும் திடீர் செய்தியாகவே இருந்தது. அது போல, இந்த ஓய்வும் உறுதியான ஒன்றுதான் என்கின்றனர் ரசிகர்கள்.

From around the web