பேட்ஸ்மேன்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐ.சி.சி.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹூயூக்ஸ் கடந்த 2014-ம் ஆண்டு உள்ளூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ‘பவுன்சர்’ பந்து தாக்கி மரணம் அடைந்தார். ‘பவுன்சர்’ பந்து தாக்கினால் வீரர்கள் வெளியேறி விடுவது உண்டு. இவ்வாறு பாதியில் வெளியேறும் வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அந்த இடத்தில் பேட்டிங் செய்ய அனுமதி கிடையாது. ஆனால் மாற்று பீல்டர்களை மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் தலையில் பந்து தாக்கி தள்ளாடும் வீரர்களுக்கு பதிலாக மாற்று பேட்ஸ்மேன்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று
 
பேட்ஸ்மேன்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐ.சி.சி.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹூயூக்ஸ் கடந்த 2014-ம் ஆண்டு உள்ளூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ‘பவுன்சர்’ பந்து தாக்கி மரணம் அடைந்தார். ‘பவுன்சர்’ பந்து தாக்கினால் வீரர்கள் வெளியேறி விடுவது உண்டு.


இவ்வாறு பாதியில் வெளியேறும் வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அந்த இடத்தில் பேட்டிங் செய்ய அனுமதி கிடையாது. ஆனால் மாற்று பீல்டர்களை மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பேட்ஸ்மேன்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐ.சி.சி.ஆனால் தலையில் பந்து தாக்கி தள்ளாடும் வீரர்களுக்கு பதிலாக மாற்று பேட்ஸ்மேன்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து ஆஸ்திரேலியாவில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 2016-17-ம் ஆண்டு முதல், மாற்று வீரர்கள் பயன்படுத்தும் திட்டம் முயற்சி செய்து பார்க்கப்பட்டது. இங்கிலாந்தில் கடந்த ஆண்டு சில முதல்தர போட்டிகளில் இந்த நடைமுறை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் லண்டனில் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் பந்து தலையை பதம் பார்த்து வெளியேறும் வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை பயன்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது.


இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. அந்த தொடரில் இருந்து இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.


From around the web