பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது திடீர் நீக்கம்: காரணம் என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி-20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சர்ஃப்ராஸ் அகமது திடீரென நீக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் மற்றும் டி20 தொடரில் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணிலேயே படுதோல்வி அடைந்தது. அதுமட்டுமின்றி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சர்ஃப்ராஸ் அகமது செயல்பாடுகள் சரியில்லை என விமர்சிக்கப்பட்டது இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி-20 அணியின் கேப்டனாக இருந்த சர்ஃப்ராஸ்
 

பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது திடீர் நீக்கம்: காரணம் என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி-20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சர்ஃப்ராஸ் அகமது திடீரென நீக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது

சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் மற்றும் டி20 தொடரில் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணிலேயே படுதோல்வி அடைந்தது. அதுமட்டுமின்றி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சர்ஃப்ராஸ் அகமது செயல்பாடுகள் சரியில்லை என விமர்சிக்கப்பட்டது

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி-20 அணியின் கேப்டனாக இருந்த சர்ஃப்ராஸ் நீக்கப்பட்டுவதாகவும், அவருக்கு பதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக ‘அஸார் அலியும் டி20 அணியின் கேப்டனாக பாபர் அசாமும் செயல்படுவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web