வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இந்தூரில் நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 14ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டி மூன்றே நாளில் முடிவுக்கு வந்துவிட்டது இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 213 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 493 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ததால்
 

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இந்தூரில் நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 14ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டி மூன்றே நாளில் முடிவுக்கு வந்துவிட்டது

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 213 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 493 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ததால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரம்

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸ்: 150/10

மாம்னுல் ஹக்: 37
முசாபிகர் ரஹிம்:43
லிட்டன் தாஸ்: 21

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 493/6 டிக்ளேர்

மயாங்க் அகர்வால்: 243
ரஹானெ: 86
ஜடேஜா: 60
புஜாரே: 54

வங்கதேச அணி 2வது இன்னிங்ஸ்: 213/10

முசாபிகர் ரஹிம்: 64
மிஹிண்டி ஹசன்: 38
லிட்டன் தாஸ்: 35

ஆட்டநாயகன்: மயாங்க் அகரால்

From around the web