இந்த வாரத்தில் மூன்றாவது இன்னிங்ஸ் வெற்றி: விறுவிறுப்பில் டெஸ்ட் போட்டிகள்

டெஸ்ட் போட்டிகள் பொதுவாக மந்தமாக ஐந்து நாட்கள் நடைபெறும் என்பதால் அவற்றுக்கு ரசிகர்களிடையே பெரும் ஆதரவு இருந்ததில்லை. இந்த நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிந்து விடுவதால் இந்த போட்டிகள் தற்போது மீண்டும் பிரபலமாகி வருகின்றன சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில்
 

டெஸ்ட் போட்டிகள் பொதுவாக மந்தமாக ஐந்து நாட்கள் நடைபெறும் என்பதால் அவற்றுக்கு ரசிகர்களிடையே பெரும் ஆதரவு இருந்ததில்லை. இந்த நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிந்து விடுவதால் இந்த போட்டிகள் தற்போது மீண்டும் பிரபலமாகி வருகின்றன

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது

இந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த முதலாவது டெஸ்ட் போட்டி சற்றுமுன் முடிவடைந்தது. இந்த போட்டியிலும் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 197 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 617 ரன்கள் எடுத்ததால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று அணிகள் தங்களது எதிரணிகளை இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது கிரிக்கெட் வரலாற்றில் பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது

From around the web