ரொம்ப நாளா அந்த சென்னை நபரை தேடுகிறேன்: சச்சின் தெண்டுல்கர்

சமீபகாலமாக இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் தமிழில் டுவீட்டுக்களை பதிவு செய்து வருகிறார். நேற்று முன் தினம் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறும் வகையில் அவர் தமிழில் டுவீட் ஒன்றை பதிவு செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன்னர் மீண்டும் தமிழில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். ரொம்ப நாளாக சென்னையை சேர்ந்த ஒருவரை தேடி வருவதாகவும் அவரை கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள்
 
ரொம்ப நாளா அந்த சென்னை நபரை தேடுகிறேன்: சச்சின் தெண்டுல்கர்

சமீபகாலமாக இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் தமிழில் டுவீட்டுக்களை பதிவு செய்து வருகிறார். நேற்று முன் தினம் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறும் வகையில் அவர் தமிழில் டுவீட் ஒன்றை பதிவு செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் மீண்டும் தமிழில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். ரொம்ப நாளாக சென்னையை சேர்ந்த ஒருவரை தேடி வருவதாகவும் அவரை கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது தாஜ் கோரமண்டல் ஊழியர் ஒருவர் என்னுடைய எல்போ கார்டு பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்’ என்று சச்சின் பதிவு செய்துள்ளார். அந்த நபர் கிடைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web