வெற்றிக்கு பின் ஃபிளையிங் கிஸ் கொடுத்த விராத் கோஹ்லி: யாருக்கு தெரியுமா?

நேற்று மும்பையில் நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. விராத் கோலி, ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய மூவரின் அதிரடியால் இந்த வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடப்பட்டது இந்த நிலையில் நேற்று வெற்றி பெற்றவுடன் மைதானத்தை விட்டு கேஎல் ராகுல் உடன் விராத் கோலி வெளியே வந்து கொண்டிருக்கும்போது பார்வையாளர்கள்
 
வெற்றிக்கு பின் ஃபிளையிங் கிஸ் கொடுத்த விராத் கோஹ்லி: யாருக்கு தெரியுமா?

நேற்று மும்பையில் நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. விராத் கோலி, ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய மூவரின் அதிரடியால் இந்த வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடப்பட்டது

இந்த நிலையில் நேற்று வெற்றி பெற்றவுடன் மைதானத்தை விட்டு கேஎல் ராகுல் உடன் விராத் கோலி வெளியே வந்து கொண்டிருக்கும்போது பார்வையாளர்கள் மத்தியில் உட்கார்ந்து இருந்த தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு விராத் கோலி பிளையிங் கிஸ் கொடுத்தார்

இதுகுறித்த வீடியோ ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பரபரப்புடன் வைரலாகி வருகிறது. நேற்று விராட் கோலியின் இரண்டாவது திருமண நாள் என்பதும் இந்த திருமண நாளை அடுத்து அதிரடியாக பேட்டிங் செய்து தனது மனைவிக்கு 70 ரன்களை திருமண பரிசாக கொடுத்துள்ளார் என்பதும் இதனை அடுத்தே அவர் மைதானத்தில் இருந்து வெளியே வரும்போது மனைவிக்கு பிளையிங் கிஸ் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web