இன்றைய போட்டியில் குல்தீப் யாதவ் ஏற்படுத்திய சூப்பர் சாதனை

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பதை சற்று முன்னர் பார்த்தோம் இந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரு அபார சாதனை செய்துள்ளார். இன்றைய போட்டியில் குல்தீப் யாதவ் 33 வது ஓவரை வீசிய போது நான்காவது, ஐந்தாவது, ஆறாவது என மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்
 
இன்றைய போட்டியில் குல்தீப் யாதவ் ஏற்படுத்திய சூப்பர் சாதனை

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பதை சற்று முன்னர் பார்த்தோம்

இந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரு அபார சாதனை செய்துள்ளார். இன்றைய போட்டியில் குல்தீப் யாதவ் 33 வது ஓவரை வீசிய போது நான்காவது, ஐந்தாவது, ஆறாவது என மூன்று பந்துகளில் மூன்று விக்கெட் எடுத்து ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்

ஏற்கனவே குல்தீப் யாதவ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 19 வயதுக்கு உட்பட்ட ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போதும் ஹாட்ரிக் சாதனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு இந்திய வீரர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் சாதனை எடுத்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது

From around the web