செஞ்சுரியை மிஸ் செய்த கோபத்தில் பேட்டை தூக்கியெறிந்த கிறிஸ் கெய்ல்

 

இன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஐம்பதாவது போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி மிக அபாரமாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்து உள்ளன 

குறிப்பாக கிறிஸ் கெயில் 63 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார் என்பதும் இதில் 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கேப்டன் கே.எல்ராகுல் 46 ரன்களும் பூரன் 22 ரன்னும் எடுத்தனர் 

இந்த நிலையில் 20 ஆவது ஓவரில் விளையாடிக் கொண்டிருந்த கிறிஸ் கெயில் 93 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு சிக்சரை அடித்தார். இதனால் அவரது ரன் 99 ஆக உயர்ந்தது. இதனை அடுத்து ஒரே ஒரு ரன் எடுத்தால் செஞ்சுரி என்ற நிலையில் அவர் எதிர்பாராத விதமாக ஆர்ச்சர் பந்தில் போல்டாகி அவுட்டானார். இதனால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாக அவர் பேட்டை தூக்கி எறிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவர் மீது கண்டிப்பாக ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web