சென்னை டெஸ்ட் 2வது நாள்: இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்!

 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து நேற்று இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் சற்று முன் இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 

ரோகித்சர்மா 161 ரன்கள், ரஹானே 67 ரன்கள், ரிஷப் பண்ட் 58 ரன்கள் எடுத்தனர். இந்த மூன்று பேட்ஸ்மேன்கள் தவிர மற்ற அனைவரும் பேட்டிங்கில் சொதப்பினார்கள் என்பதும் குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் வெறும் 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 

india 329

இந்த நிலையில் சற்று முன்னர் இங்கிலாந்து அணியினர் தனது முதல் இன்னிங்சை தொடங்கி உள்ளனர். முன்னதாக இங்கிலாந்து அணியின் மொயின் அலி 4 விக்கெட்டுகளையும், ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும் லீச் 2 விக்கெட்டுகளையும், ஜோ ரூட் ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியை வென்று உள்ள நிலையில் இந்த டெஸ்ட் போட்டியை இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது 

From around the web