சென்னை டெஸ்ட்: முதல் போட்டிக்கு பார்வையாளர்கள் அனுமதி உண்டா?

 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பிப்ரவரி 5ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கான பயிற்சியில் இரு நாட்டு அணியின் வீரர்கள் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

இந்த மைதானம் சூழல்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுவதால் இரு அணிகளிலும் சுழல் பந்துவீச்சாளர்கள் அதிகம் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் போட்டிகள் நடைபெறுவதால் அதை பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடம் இருந்து எழுந்து வந்தது 

chennai test

இதனை கருத்தில் கொண்டு சென்னையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்தது. இதுகுறித்த முறையான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 

ஆனால் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. ஆனால் இந்த கோரிக்கைக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மறுப்பு தெரிவித்தது. பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்கள் அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதிபட கூறியிருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

From around the web