ஹர்பஜன்சிங் விலகல் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முக்கிய தகவல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முக்கிய அணிகளில் ஒன்றாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு என்பதும், தனிப்பட்ட சோகம் காரணமாக சுரேஷ் ரெய்னா இந்தத் தொடரில் இருந்து விலகியதாக கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி வீரரான ஹர்பஜன்சிங் சிஎஸ்கே அணியில் இருந்து இந்த ஆண்டு மட்டும் விலக உள்ளதாக வந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தனது சொந்த காரணங்களுக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகவும் தனது முடிவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து கூறிய சிஎஸ்கே அணியின் சிஇஓ சீனிவாசன் அவர்கள் ’ஹர்பஜன்சிங் அவர்களின் முடிவை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அவருக்கு தொடர்ந்து ஆதரவாக அணியின் நிர்வாகம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்

இந்த ஆண்டு ஹர்பஜன்சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web