அசைக்க முடியாத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ்: படுபாதாளத்தில் ஐதராபாத்

 
அசைக்க முடியாத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ்: படுபாதாளத்தில் ஐதராபாத்

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் வார்னர் 57 ரன்களும் மணீஷ் பாண்டே 61 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து 172 என்ற இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் மிக அபாரமாக விளையாடி 75 ரன்கள் எடுத்து ஆட்டம் நாயகன் விருதை பெற்றார். அதேபோல் டூபிளஸ்சிஸ் 56 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

csk

நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி அதில் வெற்றி பெற்று ஒரே ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. அதற்கு நேர்மாறாக ஐதராபாத் அணி 6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஐந்து தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை நீண்ட பேட்டிங் வரிசை மற்றும் அபாரமான பந்து வீச்சு ஆகியவை காரணமாக தொடர் வெற்றி பெற்று வருவதாகவும், அந்த அணியை யாரும் அசைக்க முடியாது என கிரிக்கெட் வர்ணனையாளர் கூறி வருகின்றனர்

From around the web