மும்பை மைதானத்தில் சென்னை; கிடைக்குமா தொடர் வெற்றி?கொந்தளிக்க காத்திருக்கும் கொல்கத்தா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது!
 
மும்பை மைதானத்தில் சென்னை; கிடைக்குமா தொடர் வெற்றி?கொந்தளிக்க காத்திருக்கும் கொல்கத்தா!

கிரிக்கெட் பிரியர்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற ஒரு கிரிக்கெட் திருவிழா ஐபிஎல். ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்களை மையமாகக்கொண்டு அவர்களின் திறனை வெளிப்படுத்தும் விதமாக வருஷம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் போட்டியானது ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் தொடங்கும். அதன்படி இந்தாண்டு ஏப்ரல் 9ஆம் தேதி இந்த ஐபிஎல் போட்டி  தொடங்கியது. தினந்தோறும் இந்த ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று கிரிக்கெட் பிரியர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது.

csk

மேலும் நேற்றைய தினம் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இளைஞர்கள் பட்டாளம் கொண்ட டெல்லி அணியுடன் தோல்வியை தழுவியது. இன்றைய தினம் இரவு 7:30 மணிக்கு மும்பை மைதானத்தில் ஐபிஎல் பலப்பரீட்சை நடைபெற உள்ளது. மேலும் மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொள்கிறது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தல டோனி உள்ளார். மேலும் கொல்கத்தா அணியின் கேப்டனாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் உள்ளார்.

மேலும் இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்குநேர் 25 போட்டிகளை சந்தித்துள்ளன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கை ஓங்கி உள்ளது. சென்னை 15 முறை வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணியானது ஒன்பது முறை வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் மீண்டும் தொடர் வெற்றி கிடைக்குமா? என்று எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டுள்ளனர்.

From around the web