உலகக்கோப்பை டி20 போட்டியில் மாற்றம்!

 
world T20

உலக கோப்பை டி20 போட்டி இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த போட்டியை நடத்த வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. 

மேலும் பல அணிகள் இந்தியாவிலிருந்து இந்த போட்டியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இதனை அடுத்து இந்த போட்டி வேறு நாட்டுக்கு மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்து அல்லது ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் நடத்த திட்டமிட்ட நிலையில் சற்றுமுன் பிசிசிஐ, உலக கோப்பை டி20 போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெறும் என அறிவித்துள்ளது. பிசிசிஐ துணைத்தலைவர் ஜெய்ஷா என்பவர் இதனை உறுதி செய்துள்ளார்.

இதனை அடுத்து இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் டி20 உலக கோப்பை போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஐபிஎல் போட்டியின் மீதிப் போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில்தான் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை டி20 போட்டியில் அட்டவணை மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

From around the web