2022 முதல் ஐபிஎல் அணிகள் எண்ணிக்கையில் மாற்றம்: பிசிசிஐ பொதுக்குழுகூட்டத்தில் ஒப்புதல்

 

ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக எட்டு அணிகள் விளையாடி வரும் நிலையில் மேலும் இரண்டு அணிகள் இணைக்கப் போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன

குஜராத் மற்றும் கேரளா ஆகிய இரண்டு அணிகள் ஐபிஎல் தொடரில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி 2022ஆம் ஆண்டு முதல் இரண்டு கூடுதலான அணிகள் ஐபிஎல் தொடரில் இணைக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வந்துள்ளது 

ipl

இன்று பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் இணைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஆலோசனையின் முடிவில் 2022ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் மேலும் 2 புதிய அணிகளை இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் எந்தெந்த அணிகள் இணைக்கப்பட உள்ளன என்பது குறித்த தகவல்கள் இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஐபிஎல் வட்டாரங்களில் இருந்து வரும் தகவலின்படி அகமதாபாத் மற்றும் கொச்சி ஆகிய இரண்டு அணிகள் இணைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் பிசிசிஐ தெரிவிக்கும் என்றும் கூறப்படுகிறது

மேலும் புதிய அணிகளில் ஒரு அணியை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

From around the web