"சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி"; இந்திய வீரர்களுக்கு மூன்று முறை பரிசோதனை நடைபெறும்!

இந்திய வீரர்களுக்கு மே 19ஆம் தேதி மும்பைக்கு வரும்முன் மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று கூறியுள்ளது!
 
"சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி"; இந்திய வீரர்களுக்கு மூன்று முறை பரிசோதனை நடைபெறும்!

தற்போது நாடெங்கும்  கொரோனா அதிர்வலை அதிகமாக வீசுகிறது. இதனால் பல்வேறு நிகழ்ச்சிகள் போன்றவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் சில தினங்களாக கிரிக்கெட் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. மேலும் இந்த போட்டியானது ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் ரசிகர்களுக்கு பார்வையிட அனுமதி இல்லை என்று கூறப்பட்டது.bcci

ரசிகர்கள் பார்வையில்லாமல் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியானது வீரர்களுக்கு கொரோனா காரணமாக தேதி அறிவிக்காமல் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் இதில் பங்கேற்ற பல வெளிநாட்டு வீரர்களுக்கும், பயிற்சியாளர் சிலருக்கும் இந்த ஆட்கொல்லி நோயான கொரோனா கண்டறியப்பட்டது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ சில பாதுகாப்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய வீரர்கள் மே 19ஆம் தேதி மும்பைக்கு வரும் முன் மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று கூறியுள்ளது.

இந்தப் பரிசோதனையில் கொரோனா இல்லை என வந்தால் மட்டுமே இங்கிலாந்து செல்ல அனுமதி என்றும் பிசிசிஐ மிகவும் திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் ஜூன் 2 இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்படும் முன் 14 நாட்கள் தனிமைப் படுத்தப் படுவர் என்றும் பிசிசிஐ  தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையேயான உலகச் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் மே 18ஆம் தேதி தொடங்குகிறது. இதனால் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

From around the web