சதம் மன்னன் சச்சினுக்கு கொரோனா தொற்று!குடும்பத்தினருக்கு இல்லை!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது!
 

ஒரு காலத்தில் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் விக்கெட் போனவுடன் அனைவரும் டிவியை நிறுத்துவது வழக்கம். அந்த அளவிற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரன்களையும் சதங்களையும் அடித்து இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு முன்மாதிரியாக தனது சாதனைகளை வைத்துள்ளார். மேலும்  இவர் நூறு நூறு சதங்களை கிரிக்கெட் போட்டிகளில் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சாதனையை இன்றளவும் யாராலும் நெருங்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

corona

மேலும் இவர் 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை பின்னர் தனது ஓய்வை அறிவித்தார். தற்போது இவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சிறிய அறிகுறிகளுடன் இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி  கொண்டு உள்ளேன் எனவும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். மேலும் எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்தார்கள்.

பரிசோதனை செய்ததில் யாருக்கும் இல்லை எனவும் சச்சின் டெண்டுல்கர் கூறினார். மேலும் இவர் இலங்கைக்கு எதிரான விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் இந்திய ஜாம்பவான் அணியின் கேப்டனாக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web