இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை யாருக்கு? ஆஸ்திரேலியா வீரர் பிரட்லீ கணிப்பு

ஐபிஎல் போட்டி வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டிக்கு மத்திய அரசு அதிகாரபூர்வமாக அனுமதி அளித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் 13வது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளது. இதில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ அவர்கள் தனது கணிப்பை கூறியுள்ளார் இவர்
 

ஐபிஎல் போட்டி வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டிக்கு மத்திய அரசு அதிகாரபூர்வமாக அனுமதி அளித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 13வது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளது. இதில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ அவர்கள் தனது கணிப்பை கூறியுள்ளார்

இவர் இதுகுறித்து கூறிய போது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் மிகவும் சாதகமாக உள்ளது அதனால் அந்த அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளைஞர்கள் குறைவாகவும் வயதானவர்கள் அதிகமாக இருந்தாலும் அவர்களுடைய அனுபவம் அவர்களுக்கு கை கொடுக்கும் என்றும் அதுதான் அவர்களுடைய மிகப்பெரிய பலம் என்றும் கூறியுள்ளார்

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 40 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அது சொந்த மைதானம் போலவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரட்லீ தெரிவித்தபடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web