டாஸ் தோற்றாலும் தோனியின் விருப்பப்படி பவுலிங்!

 
டாஸ் தோற்றாலும் தோனியின் விருப்பப்படி பவுலிங்!

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ள நிலையில் ஹைதராபாத் கேப்டன் வார்னர் டாஸ் வென்றதை அடுத்து அவர் பேட்டிங் செய்ய முடிவு செய்தார் 

இதுவரை டாஸ் வென்ற கேப்டன்கள் பெரும்பாலும் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டி என்பதால் பேட்டிங்கை வார்னர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது 

csk

இந்த டாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் பேட்டியளித்த தோனி ’இன்று நான் டாஸ் வென்று இருந்தாலும் பந்துவீச்சை தான் எடுப்பேன் என்றும் அதனால் இந்த முடிவு எங்களுக்கு சாதகமானதே என்றும் கூறினார். மேலும் இன்றைய அணியின் மொயின் அலி மற்றும்  நிகிடி ஆகியோர் இணைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் 

இன்றைய போட்டியில் சென்னை அணி வென்றால் பெங்களூர் அணியை பின்னுக்கு தள்ளி விட்டு மீண்டும் முதலிடம் பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஐதராபாத் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web