100 ஆண்டுகளில் மிகச்சிறந்த யார்க்கர் பவுலர்: நடராஜனுக்கு முன்னாள் கேப்டன் பாராட்டு!

 

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாக யார்க்கர் புகழ் நடராஜன் கருதப்படுகிறார். ஐதராபாத் அணியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மிகத் துல்லியமாக யார்க்கர்களை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடித்தார். உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள கலங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக ஆஸ்திரேலியா சென்று இருக்கும் இந்திய அணியில் நடராஜனிடம் பெற்று உள்ளார் என்பதும் ஆஸ்திரேலியாவில் தனது யார்க்கர்கள் மூலம் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை குறிப்பாக தனது ஐபிஎல் கேப்டன் வார்னரை கலங்கடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 

kapildev

இந்த நிலையில் கடந்த நூறு ஆண்டுகளில் நடராஜனை போல யாரும் இவ்வளவு துல்லியமாக சிறப்பாக யாக்கர்கள் வீசியது இல்லை என முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார் 

ஐபிஎல் 13வது சீசனில் எனது ஹீரோ நடராஜன் தான் என்றும் இளம் வீரரான அவர் துணிச்சலாக யார்க்கர்களை வீசினார் என்றும் அவர் வீசிய ஒவ்வொருவரும் யார்க்கரும் சிறப்பாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். கபில்தேவின் இந்த பாராட்டு நடராஜனுக்கு மிகச்சிறந்த பரிசு என்பது குறிப்பிடத்தக்கது

From around the web