முக்கிய போட்டியில் சொதப்பிய பெங்களூர்: டெல்லி பிளே ஆப் போகுமா?

 

இன்று நடைபெற்ற 55வது ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையில் இரு அணிகளும் இந்த போட்டியை வெல்ல தீவிர முயற்சியில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த போட்டி முக்கிய போட்டியாக இருந்தும் முன்னணி பேட்ஸ்மேன்களான விராத் கோஹ்லி 29 ரன்களும், டிவில்லியர்ஸ் 35 ரன்களும் பிலிப்பி 12 ரன்களும் மட்டுமே எடுத்தனர். படிக்கல் மட்டுமே 50 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியின் நார்ட்ஜே 3 விக்கெட்டுக்களையும் ரபடா 2 விக்கெட்டுக்களையும் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்

இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் பெங்களூரு அணி 153 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் எளிய இலக்கை அடைந்து வெற்றி பெற்று, டெல்லி அணி அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web