அடுத்தடுத்து உதவும் ஆஸ்திரேலிய வீரர்கள்! 41லட்சம் நிதி உதவி!

கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிசன் வாங்க இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ நாற்பத்தி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்!
 
அடுத்தடுத்து உதவும் ஆஸ்திரேலிய வீரர்கள்! 41லட்சம் நிதி உதவி!

இந்தியாவில் தற்போது மிகவும் காட்டுத்தீயாக பரவி வருகிறது கொரோனா வைரஸ். கொரோனா எதிராக  மிகவும் போராடிக் கொண்டுள்ளது. மேலும் நோயாளிகளுக்கு தடுப்பூசிகள் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படுகின்றன.ஆயினும் பல பகுதிகளில்  பற்றாக்குறை நிலவுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மூச்சுத் திணறல்  ஏற்படலாம். அதனால் அவர்களுக்கு ஆக்சிசன்  தேவை உள்ளது.  சில தினங்களாக இந்தியா முழுவதும் ஆக்சிசன் தட்டுப்பாடு அதிகமாக காணப்படுகிறது.bretelee

மேலும் இந்தியாவிற்கு ஆக்சிஜனை உற்பத்தி அதிகரிக்கும் வண்ணம் பல நாடுகள் உதவி செய்கின்றன. குறிப்பாக அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜெர்மனி சீனா போன்ற நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. இந்நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் பந்து வீச்சாளரான பிரட் லீ தற்போது இந்தியாவிற்கு நிதி உதவி அனுப்பி உள்ளார். மேலும் அவர் இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிசன் வாங்க 41 லட்சம் ரூபாய் நிதி அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியாவை தனது இரண்டாவது நாடாக கருதி இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் ஓய்வுக்கு பின்னும் முன்னும் இந்தியர்கள் என் மீது அன்பு காட்டினார் என்றும் அவர் கூறினார். வைரஸ் தொற்றால் இந்தியர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதை கண்டு வேதனை அடைகிறேன் என்று கூறியுள்ளார் இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான இந்தியாவிற்கு பாட் கம்மின்ஸ் நிதி உதவி பண்ணி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு உதவி வருகிறது.

From around the web