மனைவிக்கு  முதல் பிரசவம்… ஐபிஎல் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் விலகல்!!

ஐபிஎல் போட்டியில் பங்கு பெற இருந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரிலும், ஐபிஎல் போட்டியில் இருந்தும் விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக், டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போன்ற முக்கிய போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. ஏறக்குறைய 5 மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில் துவங்கியது.

இங்கிலாந்து போட்டியானது சிறப்பாக நடத்தி முடித்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியானது செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மேலும் கால்பந்து பிரீமியர் லீக் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற இருந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரிலும், ஐபிஎல் போட்டியில் இருந்தும் விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

கேன் ரிச்சர்ட்சன் கூறியதாவது, ‘‘உலகின் மிகச் சிறந்த பிரீமியர் லீக் போட்டிகளில் ஒன்றான, ஐபிஎல் லீக் போட்டியில் இருந்து விலகுவது எனக்கு பெரும் வருத்தமாக உள்ளது. என் மனைவிக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளதால் அவருடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

முதல் குழந்தை என்பதால், நான் கட்டாயம் அவருடன் இருக்க வேண்டும். ஐபிஎல் போட்டியில் பங்கு பெறாமல் போவது வருத்தமாக இருந்தாலும், இன்னொரு முறை ஐபிஎல் போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம், ஆனால் குழந்தை பிறக்கும்போது மனைவியுடன் இருக்கும் வாய்ப்பு அமையப் பெறாது” என்று கூறியுள்ளார்.

From around the web