ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

 

கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஜப்பானின் நவாமி ஓசாகா ஆகிய இருவரும் மோதினர். இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் 6-3 6-4 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்சை நவாமி ஒசாகா வீழ்த்தினார். இதனை அடுத்து ஒசாகா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

naomi osaka

அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் இந்த ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கோப்பையை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அரையிறுதியில் தோல்வி அடைந்தது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நவாமி ஒசாகா இந்த வெற்றியுடன் தொடர்ச்சியாக 20 வெற்றிகளை பெற்றுள்ளார் என்பதும், செரீனாவை மட்டும் அவர் 10 முறை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி வரும் 18ஆம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ளது

From around the web