195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா: இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் எவ்வளவு?

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்ன் நகரில் தொடங்கியது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது 

இந்த நிலையில் இன்று காலை களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சாளர்களை அதிரடி பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. லாபிசஞ்சே மற்றும் ஹெட் ஆகிய இருவர் மட்டும் ஓரளவு நிலைத்து விளையாடினார்கள் என்பதும் இருப்பினும் பும்ரா, அஸ்வின், சிராஜ் ஆகியோர்களின் அதிரடி பந்து வீச்சில் காரணமாக 195 ரன்களில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடதக்கது

aus vs ind 2nd a

பும்ரா 4 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் முதல் ஓவரிலேயே மயங்க் அகர்வால் டபிள்யூ முறையில் அவுட்டானார். இதனை அடுத்து 28 ரன்களுடனும் கில் மற்றும் புஜாரே 7 ரன்களுடன் விளையாடியபோது இந்தியா 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web