ஆஸ்திரேலியாவில் அஸ்வின் பந்துவீச்சு: வைரலாகும் பயிற்சி வீடியோ

 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்காக சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றது என்பது தெரிந்ததே

ஆஸ்திரேலியாவில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது என்பதும் இந்திய அணி தற்போது அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

முன்னதாக இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டனர் என்பதும் இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அஸ்வின் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அஸ்வின் சுழல் பந்து வீசி பயிற்சி செய்து வரும் வீடியோவுக்கு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் அஸ்வினின் பந்து வீச்சு அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web