அஸ்வின் அபார பந்துவீச்சு: 178 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து!

 

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் மிக அபாரமாக விளையாடி 578 ரன்கள் குவித்தது. ஆனால் அதே நேரத்தில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு சுருண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் மிக அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 337 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 420 என்ற இலக்கை நோக்கி இந்தியா தற்போது விளையாடி வருகிறது.

aswin kohli

சற்றுமுன் வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது என்பதும், ரோகித் சர்மா 12 ரன்களில் அவுட் ஆகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் 9 விக்கெட்டுகளை கைவசம் வைத்திருக்கும் இந்திய அணி 395 என்ற இலக்கை எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web