ஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஸ்டீவன் ஸ்மித் விலகல்

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 258 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 250 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 96 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 258 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பென் ஸ்டோக்ஸ் 115 ரன்களுடனும், பேர்ஸ்டோ 30 ரன்களுடனும்
 
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஸ்டீவன் ஸ்மித் விலகல்

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 258 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 250 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 96 ரன்கள் எடுத்திருந்தது.

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஸ்டீவன் ஸ்மித் விலகல்கடைசி நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 258 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பென் ஸ்டோக்ஸ் 115 ரன்களுடனும், பேர்ஸ்டோ 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சம்பவம் ஆஸ்திரேலிய  கேப்டன் ஸ்டீவன் சுமித்திற்கு காயம் ஏற்பட்டதுதான்.

அதாவது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஒரு பந்து ஸ்டீவன் சுமித் கழுத்தினை தாக்கியதால் அப்படியே விழுந்துவிட்டார். முழுவதும் விலகாமல் சிறிது நேர சிகிச்சைக்கு பிறகு மீண்டும் களம் இறங்கி 92 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அடுத்த நாள் இந்தக் காயத்தின் பாதிப்பினை உணர்ந்ததாக அவர் கூற ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் இந்த டெஸ்டில் கடைசி நாள் ஆட்டத்தில் இருந்து அவர் விலகினார்.

3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்குகிறது.

From around the web