ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், மேத்யூ

இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 284 ரன்களும், இங்கிலாந்து 374 ரன்களும் எடுத்தன. 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 46 ரன்னில், டிராவிஸ் ஹெட் 21 ரன்னில் களத்தில் இருந்தனர். அணியின்
 

இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 284 ரன்களும், இங்கிலாந்து 374 ரன்களும் எடுத்தன.

90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 46 ரன்னில், டிராவிஸ் ஹெட் 21 ரன்னில் களத்தில் இருந்தனர்.

ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், மேத்யூ

அணியின் ஸ்கோர் 205 ரன்களாக உயர்ந்த போது, டிராவிஸ் ஹெட் 51 ரன்னில் கேட்ச் ஆனார்.

அடுத்து ஸ்டீவன் சுமித்துடன், மேத்யூ வேட் கைகோர்த்தார். இந்த ஜோடியினரும் இங்கிலாந்தின் பந்து வீச்சை சிதறடித்தனர். இங்கிலாந்தின் முன்னணி பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை. இது இங்கிலாந்துக்கு பின்னடைவாக அமைந்தது.

ஸ்டீவன் சுமித் 142 ரன்களில் வெளியேறினார். மேத்யூ வேட் 110 ரன்களில்  கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேப்டன் டிம் பெய்ன் 34 ரன்களில் வீழ்ந்தார்.

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 112 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 487 ரன்கள் குவித்தது. பேட்டின்சன் 47 ரன்களுடனும், கம்மின்ஸ் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்துள்ளது.

From around the web