ஆஷஸ் 2-வது டெஸ்ட்- ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி வெற்றி வாகை சூடியது. உலகக் கோப்பையில் வாகை சூடிய இங்கிலாந்து அணி முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஆதிக்கம் செலுத்தி வந்த போதிலும் பின் பாதியில் ஆடிய மோசமான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சுருண்டது. ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஸ்டீவன் சுமித் சதம் விளாசி ரசிகர்களைக் குஷிப்படுத்தியதோடு, அணியை வெற்றிப்
 
ஆஷஸ் 2-வது டெஸ்ட்- ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி வெற்றி வாகை சூடியது.


உலகக் கோப்பையில் வாகை சூடிய இங்கிலாந்து அணி முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஆதிக்கம் செலுத்தி வந்த போதிலும் பின் பாதியில் ஆடிய மோசமான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சுருண்டது.

ஆஷஸ் 2-வது டெஸ்ட்- ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதல்

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஸ்டீவன் சுமித் சதம் விளாசி ரசிகர்களைக் குஷிப்படுத்தியதோடு, அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றார். இந்த நிலையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பதிலாகவும், ஜாக் லீச், மொயீன் அலிக்கு மாற்றாகவும் ஆடுகிறார்கள். ஆஸ்திரேலிய அணியில் பேட்டின்சனுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆஸ்திரேலிய அணி அடுத்த வெற்றியை நோக்கி ஆடும். இங்கிலாந்து அணி முதலாவது வெற்றிக்காகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


From around the web