சூப்பர் ஓவரில் முடிந்த மற்றொரு போட்டி: பெங்களூரு சூப்பர் வெற்றி 

 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதியது 

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 201 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடதக்கது

பெங்களூரு அணியின் படிக்கல், பின்ச் மற்றும் டிவில்லியர்ச் ஆகியோர் அரைசதம் அடித்து மிக அபாரமாக விளையாடினார்கள்

இந்த நிலையில் 202 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்ததால் போட்டி டிராவில் முடிந்தது. இஷான் கிசான் அபாரமாக விளையாடி 99 ரன்கள் அடித்தார். பொல்லார்டு 60 ரன்கள் அடித்தார்.

இந்த நிலையில் சூப்பர் ஓவர் வீசப்பட்ட நிலையில் மும்பை அணி சூப்பர் ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு விக்கெட்டை இழந்தது. ஆனால் பெங்களூர் அணி 11 ரன்கள் எடுத்ததால் அந்த அணி வெற்றி பெற்றது 

இந்த வெற்றியை அடுத்து பெங்களூர் அணியின் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் புள்ளிகள் பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web