கேதார் ஜாதவால் மீண்டும் ஒரு தோல்வி: சொதப்பிய சிஎஸ்கே 

 

இன்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் கேதார் ஜாதவ் கடைசி நேரத்தில் சொதப்பலான ஆட்டத்தின் காரணமாக சென்னை அணி மீண்டும் தோல்வி அடைந்தது 

இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே கேதார் ஜாதவ் சரியாக விளையாடவில்லை. எனவே அவரை அணியில் இருந்து தூக்க வேண்டும் என பலர் கூறியும் தோனி விடாப்பிடியாக கேதார் ஜாதவ்வை அணியில் இடம் கொடுத்துள்ளார்

இன்று நடைபெற்ற போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய ஜாதவ், தோனியின் நம்பிக்கையை மீண்டுமொரு காப்பாற்றவில்லை 

ஜாதவ் கடைசி நேரத்தில் இறங்கி 12 பந்துகளில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசி ஓவரில் 26 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் முதல் பந்தை அடித்தும் அவர் ரன் எடுக்காமல் நின்றது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது 

அதன் பின் இரண்டாவது பந்தை டாட் பாலாக்கி மூன்றாவது பந்தில் ஒரே ஒரு ரன் அடித்தார். அதற்கு அடுத்த மூன்று பந்துகளில் ஜடேஜா 14 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரை ஜடேஜா ஆரம்பம் முதல் சந்தித்து இருந்தால் இந்த போட்டியை சென்னை வெற்றி பெற்றிருக்கும் என்பது குறிப்பிடதக்கது 

கேதார் ஜாதவ்வின் மோசமான ஆட்டத்தினால் சென்னை அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனியாவாது தோனி கேதார் ஜாதவ்வை அணியில் இருந்து தூக்க வேண்டும் இல்லையே தோனி வெற்றியை நினைத்து கூட பார்க்க முடியாது

From around the web