இங்கிலாந்துக்கு கிளம்ப இருந்த நேரத்தில் 3 வீரர்களுக்கு கொரோனா: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிர்ச்சி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாளை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் திடீரென அந்த அணியின் மூன்று வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் இந்த நேரத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாட ஒப்புக்கொண்டது. இந்த தொடரில் 3 டெஸ்ட் மற்றூம், 3 டி20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சி செய்து போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.
 
இங்கிலாந்துக்கு கிளம்ப இருந்த நேரத்தில் 3 வீரர்களுக்கு கொரோனா: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிர்ச்சி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாளை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் திடீரென அந்த அணியின் மூன்று வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் இந்த நேரத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாட ஒப்புக்கொண்டது. இந்த தொடரில் 3 டெஸ்ட் மற்றூம், 3 டி20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சி செய்து போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை மறுநாள் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு செல்லவுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஷாதப் கான், ஹைதர் அலி, ஹரிஷ் ராஃப் ஆகிய மூன்று வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதித்த மூன்று வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாளை மறுநாள் மீண்டும் ஒரு பரிசோதனை செய்யப்படும் என்றும், அதிலும் நெகட்டிவ் என்றால் மட்டுமே இங்கிலாந்துக்கு மூன்று வீரர்களும் அனுப்பப்படுவர் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

From around the web