நடராஜனை அடுத்து ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய இன்னொரு தமிழக வீரர்

 
நடராஜனை அடுத்து ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய இன்னொரு தமிழக வீரர்

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் ஐபிஎல் ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இன்னொரு தமிழக வீரருக் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். நேற்று டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு தமிழக வீரர் அஸ்வின் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது 

ashwin

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து தற்காலிகமாக விலக முடிவு செய்திருப்பதாக அஸ்வின் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். தன்னுடைய குடும்பத்தினர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அதே நேரத்தில் குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு மீண்டும் அணியில் இணைந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web