டாஸ் வென்ற டெல்லி கேப்டன் எடுத்த அதிரடி முடிவு!

 

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முக்கிய போட்டியான குவாலிஃபையர் 2 போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்

டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட்டிங் என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி மும்பை அணியுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணியாக மாறும் என்பதால் இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெல்வதற்கு தீவிர முயற்சி எடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்:

டெல்லி அணி: தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், ஸ்டோனிச், ரிஷப் பண்ட், ஹெட்மயர், டூபே, அக்சர் பட்டேல், அஸ்வின், ரபடா மற்றும் நார்ட்ஜே

ஐதராபாத் அணி: வார்னர், கோஸ்வாமி, மணிஷ் பாண்டே, வில்லியம்சன், கார்க், ஹோல்டர், அப்துல் சமது, ரஷித்கான், நதீம், சந்தீப் சர்மா, நடராஜன்

From around the web