அதிரடி பேட்ஸ்மேன்! சமாளிக்குமா சென்னை பவுலர்ஸ்?பொறுத்திருந்து பார்ப்போம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது!
 
அதிரடி பேட்ஸ்மேன்! சமாளிக்குமா சென்னை பவுலர்ஸ்?பொறுத்திருந்து பார்ப்போம்!

மக்கள் மத்தியில் கோடை காலம் தொடங்கினால் பல்வேறு அச்சங்கள் நிலவும் .ஆனால் இந்த கோடை காலத்திலும் ஒரு தரப்பினர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் யாரென்றால் கிரிக்கெட் விரும்பிகள். இந்த கிரிக்கெட் விரும்பிகள் கோடைகாலம் தொடங்கியதும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் திருவிழா தொடங்கிவிடும். இதனால் அவர்கள் விரைவாக தங்களது வேலைகளை முடித்துவிட்டு வேகமாக வீட்டிற்கு வந்து ஐபிஎல் திருவிழாவை கண்டு மகிழ்வர்.ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் திருவிழா பார்வையாளர்களை யாருமின்றி நடைபெறுவது சோகமான செயல்.

ipl

எனினும் மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயான கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இவ்வாறு நடைபெறுவதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது. இந்த ஐபிஎல் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது.மேலும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணி கேப்டன் விராட் கோலியின் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இடம் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் நமது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  கேப்டன் டோனி தலைமையில் அதிரடி கே எல் ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

எனினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் தோல்வி பெற்றது மிகவும் சோகமான உண்மை .இருப்பினும் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். மேலும் பஞ்சாப் அணியில் உள்ள பேட்டிங் வரிசையாக மிகவும் அதிரடியாக இந்தாண்டு காணப்படுகிறது. குறிப்பாக சிக்சர் மன்னன் கெயல் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதிரடி பிளேயர் கே எல் ராகுல்அவரோடு இணைந்து சிக்ஸர்கள் அடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சென்னையின் பவுலிங் ஆனது பஞ்சாபின் அதிரடி பேட்டி சமாளிக்குமா? என்றும் கேள்வி இருக்கிறது. மேலும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் எதிர்நோக்கி போட்டிக்காக காத்துக் கொண்டுள்ளனர்.

From around the web